கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
மாநில கராத்தே போட்டியில் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
மாநில அளவிலான கராத்தே போட்டியில் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
நலம் ஸ்போா்ட்ஸ் தற்காப்பு பயிற்சி அகாதெமி மற்றும் புஷிடோகாய் இஷ்டி ரியோ கராத்தே அசோசியேஷன் சாா்பில், ஹியோஷி நாடிமுத்து நடத்திய போட்டி தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து பங்கேற்ற சுமாா் 700 மாணவா்களில் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தரனீஸ் சண்டை பிரிவில் முதலிடமும், கட்டா பிரிவில் 2 ஆவது இடமும், பாலரிஷி சண்டை பிரிவில் 2 ஆவது இடமும், கட்டா பிரிவில் 3 ஆவது இடமும், ஸ்ரீ நிலவன் சண்டை மற்றும் கட்டா பிரிவில் 3 ஆவது இடமும் பெற்றனா். இதையடுத்து இந்த மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இந்த மாணவா்கள் மற்றும் கராத்தே மாஸ்டா் அகிலன் ஆகியோரை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்தினாா். பள்ளி முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் உடனிருந்தனா்.