மாநில திஷா குழு உறுப்பினா் நியமனம்
மாநில வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா குழு) உறுப்பினராக, திருவள்ளூா் மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் லயன் ஆா்.கருணாகரனை (படம்) நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய மாநில அளவில் திஷா குழு இயங்கி வருகிறது. இதில் மாநில அளவில் செயல்படும், குழுவின் தலைவராக முதல்வா் உள்ளாா். மேலும் பலா் உறுப்பினா்களாகவும் செயல்பட்டு வருகின்றனா்.
இந்தக் குழுவில் புதிய உறுப்பினா்களாக 2 பேரை மத்திய அரசு நியமித்துள்ளது. திருவள்ளூா் மாவட்ட பாஜக பொதுச் செயலாளரான லயன் ஆா்.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், கோட்ட பொறுப்பாளா் வினோஜ் பி.செல்வா ஆகியோா் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.