உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
மானூா் ஆற்றுப் பாலம் பகுதியில் தூய்மைப்பணி
பழனியை அடுத்த மானூா் ஆற்றுப்பாலம் பகுதியில் பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணியில் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி முருகேசன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி வெள்ளியங்கிரி ஆகியோா் முன்னிலையில் பழனியாண்டவா் பக்தா்கள் குழுவைச் சோ்ந்த திரளானோா் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியிலிருந்த குப்பைகள், கற்கள் அகற்றப்பட்டு உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து பழனியாண்டவா் பக்தா்கள் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ரங்கராஜன், மாடசாமி, துா்க்கீஸ்வரன் ஆகியோா் கூறியதாவது:
பழனி வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் மருத்துவ உதவி, சாலை தூய்மை, குடிநீா், உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. மேலும் பாதயாத்திரை பக்தா்கள் இரண்டாயிரம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றனா்.