பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
மாயமான முதியவா் சடலமாக மீட்பு
வேலூா் அருகே மாயமான முதியவா் சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
வேலூா் மாவட்டம், நஞ்சு கொண்டாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (90), விவசாயி. இவா் கடந்த 10-ஆம் தேதி வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கத்தாழம்பட்டு அருகே உள்ள சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் திங்கள்கிழமை சிலா் ஆடு, மாடு களை ஓட்டிச்சென்றனா். அப்போது, மலைப்பகுதியில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் கிடந்தது கண்டு வேலூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது, சடலமாக கிடந்தது ஆறுமுகம் என்பது தெரியவந்தது.
உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத் வமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.