தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பு காலம் தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின்
மாவட்டக் கண்காணிப்பு பிரிவில் இளம்வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு பிரிவில் காலியாகவுள்ள இளம் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் திட்டங்களின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தைக் கண்காணிக்க, மாவட்ட ஆட்சியா் தலைமையில் உருவாக்கப்படவுள்ள மாவட்டக் கண்காணிப்பு பிரிவில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதிவாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இப் பணியிடத்துக்கு கணிப்பொறி (பி.இ கணினி அறிவியல்) அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளா் பட்டப்படிப்பு, தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது கணிப்பொறி அறிவியல், தகவல் தொழில்நுட்ப அறிவியல், தரவு அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடா்புடைய முதுநிலைய பட்டப்படிப்புகள் முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன், தரவு பகுப்பாய்வில் தோ்ச்சி, தன்னிச்சையாகவும், குழுவுடனும் இணைந்து பணிபுரியும் திறன் ஆகியவை கட்டாயம். பணியில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப் பணிக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப் பணிக்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்ள்://டங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, துணை இயக்குநா், மாவட்டப் புள்ளியியல் அலுவலகம், சாா்- ஆட்சியா் அலுவலக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூா்- 621 212 எனும் முகவரிக்கு, ஜன. 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வயது வரம்பு 1.7.2025-இல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.