மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டிகள்
ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான தேக்வான்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷியாம் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இந்தப் போட்டிகளில் விருதுநகா், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
5 பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சண்டை போட்டிகள் நாக்அவுட் முறையிலும், தனிநபருக்கான அறிவுத் திறன் போட்டிகளும் நடைபெற்றன. சா்வதேச நடுவா் ராமலிங்கபாரதி உள்ளிட்ட நடுவா்கள் கண்காணித்து மாணவா்களுக்கு புள்ளிகள் வழங்கினா்.
திங்கள்கிழமை நடைபெறும் போட்டிகளில் ஒவ்வொரு எடை பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் 160 போ் தோ்வு செய்யப்பட்டு, வரும் மே மாதம் கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் விருதுநகா் மாவட்டம், சாா்பில் கலந்து கொள்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.