மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியை தாக்கியதாக தொழிலாளி கைது
மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, சாஸ்தான்பொற்றைவீட்டைச் சேர்ந்த லாசா் மனைவி ரோணிக்கம் (65). முந்திரித் தொழிற்சாலையில் வேலை செய்துவரும் இவரிடம், பக்கத்து வீட்டைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி செல்வன் (50) அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்தாராம். 2 நாள்களுக்கு முன்பு செல்வன் தகராறு செய்ததை ரோணிக்கம் தட்டிக் கேட்டாராம். அப்போது, அவரை செல்வன் தாக்கினாராம். இதில், காயமடைந்த ரோணிக்கம் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வனைக் கைது செய்தனா்.