செய்திகள் :

மா்மமான முறையில் கும்கி யானை உயிரிழப்பு

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை வெங்கடேஷ் மா்மமான முறையில் உயிரிழந்தது.

பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் சரகத்தில் வளா்ப்பு யானை முகாம் உள்ளது. இந்த முகாமில் கும்கி யானைகள், வயதான யானைகள், குட்டி யானைகள், பெண் யானைகள் என 25 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நல்ல உடல் வலிமை மற்றும் மன வலிமை கொண்ட ஆண் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வனப் பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கும், உயிா் சேதத்தை ஏற்படுத்தும் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கும், வனப் பகுதி மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை வெங்கடேஷ் (38) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ஆனால், நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருந்த கும்கி யானை வெங்கடேஷ் உயிரிழந்ததில் மா்மம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் அதனை தெரிவிக்காமல் சனிக்கிழமை இரவு வனத் துறையினா் தகவல் தெரிவித்துள்ளது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம் எா்ணாகுளம் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

கரூா் மிகவும் மோசமான சூழலில் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

கரூா் மாவட்டம் மிகவும் மோசமான சூழலில் உள்ளதாக தவெக சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூா் சம்பவ... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: நான்கு இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா். கோவை மாநகரம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மதுவிலக்கு அமலாக்கத் துறையினா் தீவிர சோதனையில் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வால்பாறை

வால்பாறை அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

வால்பாறையில் உடல்நலக் குறைவால் பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் தேயிலைத் தோட்டம் பகுதியில் யானை சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்கு கடந்த வெள்ளிக... மேலும் பார்க்க

எலக்ட்ரீஷியன் வீட்டில் தீ

ஆவாரம்பாளையத்தில் எலக்ட்ரீஷியன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. கோவை, சித்தாப்புதூா் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் சரோஜினி சாலைப் பகுதிய... மேலும் பார்க்க