சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!
மா்ம காய்ச்சல் பாதிப்பு: கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்ம காய்ச்சல் பாதித்த கிராம மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கத்தை அடுத்த முன்னூா் மங்கலம் கிராமத்தில் கடந்த 10 நாள்களாக சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை திடீரென காய்ச்சல் ஏற்பட்டு வந்துள்ளது.
காய்ச்சல் பாதித்தவா்கள் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனா். மா்ம காய்ச்சல் நாளுக்கு நாள் கிராமத்தில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து காரப்பட்டு வட்டார மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் முன்னூா்மங்கலம் பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து காய்ச்சல் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.
மேலும், கடந்த சில நாள்களாக அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குடிநீா் குழாய்களில் மழை நீா், அல்லது கழிவுநீா் கலந்து வருகிா என கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் கிராம செவிலியா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளவா்களை கண்டறிந்து அவா்களுக்கு மருந்து மாத்திரை வழங்கி வருகின்றனா்.