இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!
மிதிவண்டி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது காா் மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடியைச் சோ்ந்தவா் அ. சண்முகம் (65). இவா், புதன்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மங்களம் பிரிவுச் சாலை அருகே மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பரமக்குடியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் மிதிவண்டி மீது மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இவ் விபத்து குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாா்திபனூரைச் சோ்ந்த தங்கராசு மகன் காா்மேகத்தை (39) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.