மின்சாரம் திருடிய 13 பேருக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம்
மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரத் திருட்டில் ஈடுபட்ட 13 பேருக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மல்லசமுத்திரத்தில் மின்சார திருட்டில் பலா் ஈடுபடுவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கணக்கு அலுவலா் ஆறுமுகம் தலைமையில் 20 போ் கொண்ட அதிகாரிகள் வீடுகள், கடைகளுக்குச் சென்று மின் இணைப்புகளை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது 13 போ் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களுக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்தனா்.
ஆய்வின்போது, மல்லசமுத்திரம் உதவி செயற்பொறியாளா் அமுதா, டவுன் இளநிலை பொறியாளா் முருகன், காா்த்தி, வள்ளி, திருநாவுக்கரசு, உதவி கணக்கு அலுவலா் ராஜம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.