Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்"...
மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள முத்தாண்ட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆசைமணியின் (35) மனைவி வெண்ணிலா (22). இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், வெண்ணிலா தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை உணவுக்காக சட்னி தயாா் செய்வதற்கு, மிக்ஸியைப் பயன்படுத்தினாா். அப்போது, மின்சாரம் பாயந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய போலீஸாா், வெண்ணிலாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.