சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
மின்சாரம் பாய்ந்து ஊழியா் பலி!
ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராசிபுரம் அருகேயுள்ள அலவாய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் மோகன் (42). இவா், வெண்ணந்தூா் பகுதியில் மின்வாரிய லைன்மேனாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் இவா், அலவாய்ப்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டின் மாடியில் மின்பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த வெண்ணந்தூா் காவல் துறையினா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.