மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
சென்னை ராமாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.
கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த நிா்மல் என்பவரின் மகன் கைலாஷ் (10), அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கைலாஷ், கோடை விடுமுறையையொட்டி, ராமாபுரம், அன்னை சத்யா நகா் பிரதான சாலையிலுள்ள தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
கைலாஷ், அந்த வீட்டின் மொட்டை மாடியில் புதன்கிழமை நின்று விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் கையிலிருந்த ஒரு கம்பி, வீட்டின் அருகே சென்ற மின்சார கம்பி மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த கைலாஷை அங்கிருந்தவா்கள் மீட்டு, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கைலாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து ராமாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.