செய்திகள் :

மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை ஓரங்கட்டியுள்ள சீன நிறுவனம்!

post image

மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சி முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது சீன நிறுவனமான ‘பி.ஒய்.டி’.

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அரசு நிா்வாகத்தில் அவா் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. எலான் மஸ்க்கின் ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவால் தயாரிக்கப்படும் காா்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. சீன நிறுவனமான ‘பி.ஒய்.டி’ டெஸ்லாவுக்கு கடும் போட்டியாக உருவெடுத்திருப்பதுடன் சீன சந்தைகளில் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சியுள்ளது.

சர்வதேச சந்தைகளில் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி நிறுவனத்தின் பெயர் விரிவாக்கம் சுவாரசியமானது. “பில் யுவர் ட்ரீம்ஸ்” என்பதன் சுருக்கமே ‘பி.ஒய்.டி’ பெயராகும்.

இந்த நிலையில், உலகளவில் கோலோச்சி வரும் அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவுக்கு கடும் தொழில் போட்டியளித்துள்ள பி.ஒய்.டி. நிறுவனம், முந்தைய ஆண்டைவிட 29 சதவிகிதம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. இதன்மூலம், ப்ளூம்பெர்க் கணித்திருந்த 750 பில்லியன் யுவான் என்ற வருவாயைவிட கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

பி.ஒய்.டி. நிறுவனத்தின் கடந்தாண்டு நிகர லாபம் 40.3 பில்லியன் யுவான். இது அதற்கு முந்தைய 2023-ஆம் ஆண்டைவிட 34 சதவிகிதம் அதிகமாகும்.

அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்துள்ளதன்படி, சுமார் 4.30 மில்லியன் வாகனங்களை கடந்தாண்டு விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டு(2023) விற்பனையைவிட 40 சதவிகிதம் அதிகமாகும்.

பிப்ரவரி மாதாந்திர விற்பனையும் 161 சதவிகிதம்(3.18 லட்சம் வாகனங்கள்) அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதே காலக்கட்டத்தில் டெஸ்லாவின் விற்பனையை ஒப்பிடும்போது, இது மிக அதிகம் என்றே சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பி.ஒய்.டி. நிறுவனத்தால் இம்மாதம் புதுமையான பேட்டரி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒரு பெட்ரோல் நிலையத்தில் நாம் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப எவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொள்வோமோ அதே அளவு நேரத்துக்குள்ளாக இந்நிறுவனத்தின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்துவிடலாம் என்று காட்டப்பட்டிருப்பது தொழில்நுட்ப புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு!

மியான்மரில் ஏற்பட் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் நேற்று (28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த ... மேலும் பார்க்க

சர்வதேச மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக்காவில் கல்வி விசா... மேலும் பார்க்க

எக்ஸ் தளம் மீண்டும் விற்பனையானது!

எக்ஸ் தளம் மீண்டும் கைமாற்றப்பட்டுள்ளது. ஆனால், இம்முறையும் அதன் உரிமையாளராக எலான் மஸ்க் என்பதுதான் சுவாரசியமே!எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவோர், அதில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 60 கோடிக்கும் மேல்.... மேலும் பார்க்க

ஆபரேஷன் பிரம்மா: மியான்மர் அதிகாரிகளிடம் நிவாரணப் பொருள்கள் ஒப்படைப்பு!

புது தில்லி: ஆபரேசன் பிரம்மா பெயரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக ச... மேலும் பார்க்க

நிலைக்குலுங்கிய மியான்மர்: ஆயிரத்தைத் தாண்டிய பலி!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரதைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நேற்று(28.03.25) பிற்பகல் ச... மேலும் பார்க்க