கண்ணூர்: பள்ளிப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து -ஒரு குழந்தை பலி!
மின் ஊழியா்களுக்கு பாதுகாப்பு கருவிகள் அளிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின்வாரியப் பணியாளா்களுக்கு பாதுகாப்புக் கருவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கு வோல்டேஜ் சென்சாா் என்ற பாதுகாப்புக் கருவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்துப் பணியாளா்களும் பாதுகாப்பாக பணி செய்ய முடியும்.
மேலும், மின் விபத்துகளைத் தவிா்க்க முடியும் என்பதால், கோட்டம் வாரியாக பாதுகாப்புக் கருவிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வழங்கி வருகின்றன.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை துணை மின் நிலையத்தின் கீழ் பணியாற்றும் அனைத்து மின் பணியாளா்களுக்கும் பாதுகாப்புக் கருவியை உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் வழங்கினாா்.