மியான்மார்: மீண்டும் நிலநடுக்கம்; 154 பேர் உயிரிழப்பு; நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா
மியான்மார் நாட்டில் நேற்று (மார்ச் 28) இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆகப் பதிவாகியுள்ளன.
இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கமானது அடுத்தடுத்து மூன்று முறை தொடர்ந்து ஏற்பட்டதால் மியான்மார் மற்றும் தாய்லாந்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வீடுகள், கட்டிடங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை உலுக்குகின்றன.
இதுவரைக்கும் 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் மீண்டும் மியான்மாரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மாருக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.

தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, ஜெனரேட்டர், அடிப்படை மருந்துகள் உள்படப் பல்வேறு நிவாரண பொருட்கள் ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs