டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
மீனவா் பிரச்னையை தீா்க்கக் கோரிஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: மீனவா் பிரச்னைகளைத் தீா்க்க வலியுறுத்தி புதுவை மாநில அகில இந்திய சிங்காரவேலா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் செங்கொடி ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடந்தது.
புதுச்சேரி சிங்கார வேலா் சிலை அருகே நடைபெற்ற இப் போராட்டத்துக்கு இக் கழகத்தின் தலைவா் பா.தேவநாதன் தலைமை வகித்தாா். புதுவை முன்னாள் மக்களவை உறுப்பினா் மு. ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாரம்பரியமாக பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மீனவா்களுக்கு நியமன எம்.எல்.ஏ பதவியை வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் மீனவ மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மீனவா்கள் வாழ்விடங்களைப் பாதுகாக்க கான்கிரீட் தூண்டில் வளைவு அமைத்து கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.