காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவு! இறுதிநாள் படப்பிடிப்பில் அழுத நடிகைகள்!
மீனாட்சி சுந்தரம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிநாள் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
இதில், நாயகி ஷோபனாவுடன் அவருடன் நடிக்கும் மதுமாவும் கட்டியணைத்து அழுத விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகனாக எஸ்.வி. சேகரும், நாயகியாக நடிகை ஷோபனாவும் நடிக்கின்றனர்.
பேரன், பேத்திகளெடுத்த வயதான முதியவர் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு இருவரும் தம்பதிகளாக சந்திக்கும் சம்பவங்களே மீனாட்சி சுந்தரம் தொடரின் கதைக்கருவாகும்.
இதில், எஸ்.வி. சேகர், நடிகை ஷோபனாக்கு தாலி கட்டும் காட்சிகளுடன் முன்னோட்ட விடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அவை அனைத்துமே இத்தொடருக்கு பலனளித்தது.
கலைஞர் தொலைக்காட்சியில் குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களிடம் சேர்ந்த தொடராக மீனாட்சி சுந்தரம் மாறியது. இந்நிலையில், இத்தொடர் விரைவில் முடியவுள்ளது.
இத்தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இத்தனை நாள்கள் ஒன்றாக பயணித்த நிலையில், இறுதிநாளன்று, நாயகி ஷோபனாவும் அவருடன் நடித்த நடிகை மதுமாவும் கண்ணீர்விட்டு கட்டியணைத்து உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | என் காதலன் எனக் கூறினால் ஏமாற வேண்டாம்: சின்ன மருமகள் நடிகை வேண்டுகோள்!