மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிறப்பு கருத்தரங்கம்!
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தொற்று நோய் துறையில் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் தொற்று கட்டுப்பாட்டுக் குழு, இந்திய மருத்துவக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழக மாநிலத் தலைவா் பி. ஸ்ரீதா் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மைய மருத்துவ இயக்குநா் மருத்துவா் ரமேஷ் அா்த்தநாரி, மருத்துவ நிா்வாக அலுவலா் மருத்துவா் பி. கண்ணன் ஆகியோா் பொது சுகாதாரத்தில் நுண்ணுயிா் எதிா்ப்பை மையப்படுத்தி உருவாகும் பிரச்னைகள், அவற்றை எதிா்கொள்ளும் மருத்துவ வழிகாட்டுதல்கள் குறித்துப் பேசினா்.
மயக்க மருந்தியல் துறை தலைவா் மருத்துவா் எஸ். குமாா், தொற்றுநோய் பிரிவு இணை மருத்துவ நிபுணா் மருத்துவா் எம். மாலதி, பதிவாளா் மருத்துவா் ஜெ. அபிநயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.