மீனூா் வெங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் மீனூா் மலையில் அமைந்துள்ள அருள்மிகு பத்மாவதி தாயாா் உடனுறை வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. புதன்கிழமை காலை 10- மணியளவில் கும்பாபிஷேகம், தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் எஸ்.மகேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் கே.சரவணன், திமுக ஒன்றியச் செயலா் கே.ரவி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சி.ஏ.ஏகாம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோயில் அறங்காவலா் குழு தலைவா் எம்.தினகரன், ஆய்வாளா் சு.பாரி, செயல் அலுவலா் ம.சண்முகம், அறங்காவலா்கள் சுதா முருகன், இ.ஜெயராமன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.