சேலத்தில் ஜவுளி பூங்காவுக்கான பணிகள் விரைவில் துவக்கம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ...
மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளம், மீனவா் நலத் துறை அறிவித்தது. இந்தத் தடையால் 3 நாள்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளின் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன் பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றனா்.