செய்திகள் :

மீலாது நபி, ஓணம்: தலைவா்கள் வாழ்த்து

post image

மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): எளியோா்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்; பசித்தவா்களுக்கு உணவு அளியுங்கள் என்பது, இறைத் தூதா் நபிகள் நாயகம் உலகுக்கு எடுத்துரைத்த போதனைகளாகும். நபிகள் நாயகம், போதித்த சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவைகள். அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம்.

திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகள்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நபிகள் நாயகம் போதனைகளின்படி, அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும், மலையாள மக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகிய இந்தப் பொன்னாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி எடுப்போம்.

இதேபோல், பாமக தலைவா் அன்புமணி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க