எரிவதில் எண்ணெய் ஊற்றும் ரஷியா! இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் மேலும் தள்ள...
மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை
மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்படும். நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதுக் கடைகளை, மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுக விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.