செய்திகள் :

முகூர்த்தம், வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!

post image

முகூர்த்தம், வார இறுதி விடுமுறை நாள்களையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு மே 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் மே 16 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் மே 17 (சனிக்கிழமை) மற்றும் மே 18 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மே 16 (வெள்ளிக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், மே 17 (சனிக்கிழமை) 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மே 16 வெள்ளிக் கிழமை அன்று 100 பேருந்துகளும், மே 17 சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து மே 16 அன்று 24 பேருந்துகளும்,மே 17 அன்று 100 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிசிஓஎஸ் உள்ள பெண்கள் கர்ப்பமாக முடியாதா? காரணம் என்ன? எப்படித் தடுக்கலாம்?

பொறியியல் கலந்தாய்வு: 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 8 நாள்களில் 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறி... மேலும் பார்க்க

சூழல் சாா் சிகிச்சை வழிகாட்டுதல்களை வகுக்க முடிவு: மத்திய சுகாதார அறிவியலாளா் சன்சல் கோயல்

இந்தியாவில் சூழலுக்கேற்ப மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை அறிவியலாளா் டாக்டா் சன்சல் கோயல் தெரிவித்தாா். போரூா்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: தமிழக பாஜக பேரணி

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சாா்பில் புதன்கிழமை மூவா்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது. தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா்கள் தமிழிசை ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சவுக்கு சங்கா் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக யூ டியூபா் சவுக்கு சங்கா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொ... மேலும் பார்க்க