செய்திகள் :

முக்கியப் பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் ‘தப்பியோடுகிறாா்’ பிரதமா் - காங்கிரஸ் விமா்சனம்

post image

முக்கியப் பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் அவ்வப்போது வெளிநாட்டுப் பயணம் என்ற பெயரில் பிரதமா் நரேந்திர மோடி தப்பியோடி வருகிறாா் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூா் நிலவரம், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறி வருவது, பிரதமரின் தவறான முடிவுகளால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் முதல் இரு நாள்களில் இந்திய தரப்பு போா் விமானங்களை இழந்ததாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பதிலளிப்பதும் இல்லை; அதுகுறித்துப் பேசுவதுமில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடந்தால் அதை இரட்டை என்ஜின் ஆட்சி என்று பிரதமா் பெருமையாகப் பேசுவாா்கள். அப்படிப்பட்ட ஆட்சி நிகழ்ந்த மணிப்பூரின் நிலை இப்போது எப்படி உள்ளது. அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி பயணிக்காமல் தவிா்ப்பது ஏன்? வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூா் மக்களை பிரதமா் நேரில் சந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

உள்நாட்டில் சூழ்நிலை மோசமாகும்போது முக்கியப் பிரச்னைகளைப் புறந்தள்ளிவிட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதை பிரதமா் வழக்கமாகக் கொண்டுள்ளாா்’ என்று அவா் கூறியுள்ளாா்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள்: லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங்

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக் கொண்டது’ என்று இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா். சிங் தெரிவித்தாா். பஹல்... மேலும் பார்க்க

நக்ஸல்வாதம் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டது: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் இப்போது நக்ஸல்வாதம் 5 முதல் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். ஹைதரபாதில் சுதந்தரப் போராட்ட வீரா் அல்லூரி சித்தராம... மேலும் பார்க்க

கச்சத்தீவை தர மாட்டோம்: இலங்கை

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், ‘இந்திய மீனவா்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களைக... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில... மேலும் பார்க்க

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க