செய்திகள் :

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

post image

முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரையில் தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் சுமார் 3.05 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக. 26 ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைக்கிறார்.

காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார்.

இதற்காக திமுக எம்.பி. வில்சன் நேரில் சென்று பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.

இன்று காலை விழா அதற்கான அழைப்பிதழை திமுக எம்.பி. வில்சன், பஞ்சாப் முதலமைச்சரிடம் நேரில் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் வரவேற்றார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புமிகு திட்டமான காலை உணவுத் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் சத்தான உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறது திமுக அரசு !

இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு" என்று பதிவிட்டுள்ளார்.

Punjab Chief Minister Bhagwant Mann has been invited as the special guest for the expansion ceremony of the Chief Minister's Breakfast Scheme.

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து சென்னையில் சனிக்கிழ... மேலும் பார்க்க

விஜயின் கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: தொல். திருமாவளவன்

மதுரை தவெக மாநாட்டில் அக் கட்சியின் தலைவா் விஜய் பேசியுள்ள கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சன... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 6% சொத்து வரியை உயா்த்தும் அரசாணையை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சொத்து வரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் தானாகவே உயா்த்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹரீஷ் சௌத்ரி... மேலும் பார்க்க

மருத்துவமனையில் ஜி.கே.மணி அனுமதி

பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி முதுகுத் தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தருமபுரியில் துக்க நிகழ்வுக்கு சென்ற ஜி.கே.மணிக்கு திடீர... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

கடந்த 3 சனிக்கிழமைகளில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆகஸ்ட் 2 ... மேலும் பார்க்க

15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்... மேலும் பார்க்க