செய்திகள் :

முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்

post image

தமிழ்நாடு முதலமைச்சர் உடல்நிலை காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இன்னும் மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அவருக்கு சில மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நேற்று இரவு அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

காரணம் என்ன?

இந்த நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

"முதலமைச்சர் நன்றாக இருக்கிறார். இரண்டு, மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பயணங்கள், ரோட்ஷோ போன்றவற்றை செய்ததால், கொஞ்சம் தலைசுற்றல் இருந்தது.

மருத்துவர்கள் நன்றாக அவரைப் பார்த்துக்கொள்கிறார்கள். அவர் சிறப்பாக இருக்கிறார்.

இரண்டு நாள்கள் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க கூறியிருக்கிறார்கள்.

விரைவில், பூரண குணமடைந்து வீடு திரும்புவார். நாளை (இன்று), சில பரிசோதனைகள் எடுக்கப்பட இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

நேற்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நடைப்பயிற்சி சென்றப்போது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இதை பரிசோதிக்க நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலிய... மேலும் பார்க்க

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க

`அரசியலில் எங்கோ, ஏதோ ஒன்று நடக்கிறது..' -ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து காங். தலைவர் ஹரிஷ் ராவத்

நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், "இந்த செய்தி மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?

மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம... மேலும் பார்க்க