தைத் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பிரமாண்ட கோலப்போட்டி... | Photo Album
முதல்முறையாக சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை!
கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டு அதிபர் முதல்முறையாக அரசுப்பயணமாக இந்தியா வருகிறார்.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வருகின்ற ஜன.14 அன்று அரசு முறைப்பயணமாக இந்தியா வருகின்றார். இரு நாடுகளுக்கு மத்தியிலான இரண்டு முக்கியத் திறன் மேம்பாட்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட வரும் அவர் ஜன.18 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அப்போதைய அதிபர் டோனி டன் கிங் யாம், புது தில்லிக்கு வருகைத் தந்தார். அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை.
இதையும் படிக்க:உ.பி.யில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது!
மேலும், இந்த பயணத்தின்போது புது தில்லியில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மூ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து, புது தில்லியில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு செல்ல உள்ளார். அங்கு அவர் அம்மாநில முதல்வர் மோஹன் சரண் மஜ்ஹியை சந்திக்கவுள்ளார். பின்னர், ஒடிசாவிலுள்ள புகழ்பெற்ற கோனார்க் கோயிலை அவர் பார்வையிட செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா மற்றும் சிங்கப்பூர் மத்தியிலான ராஜாந்திர உறவு 2025 இல் 60வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், சிங்கப்பூர் அதிபர் தற்போது இந்தியா வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.