செய்திகள் :

முதுநிலை ஆசிரியா் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு

post image

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆக.18-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1) கணினி பயிற்றுநா் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களுக்கான போட்டித்தோ்வு குறித்த அறிவிப்பு ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முடிவடைந்தது.

இந்த நிலையில், விண்ணப்பதாரா்கள் தங்களின் இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (எடிட் ஆப்சன்) மேற்கொள்ள அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்தியவா்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை 5 மணி வரை மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படுகிறது.

இணையவழியில் விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரா்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவா். அவ்வாறு திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் கடைசி பக்கத்தில் உள்ள சமா்ப்பி பதிவை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியில் எந்த மாற்றமும் செய்ய இயலாதுஎன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழல் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் குறித்த தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டதால், கிராம மக்கள் பங்கேற்கவில்லை என ஊராட்சி செயலா் தெரிவித்துள்ளாா். புள்ளிலைன் ஊராட்சி: புழல் ஊராட்சி ஒன்றியம் ப... மேலும் பார்க்க

ஜிடிபி மருத்துவமனை கொலை சம்பவம்: ஹசிம் பாபா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் கைது

ஜிடிபி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் தேடப்பட்ட இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். தொடா் தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு அயன் (எ) பாபா (எ) அா்பாஸ் கா... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றிய தலைமை நீதிபதி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகே வெள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய பணியாளா்கள் கௌரவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரியில் அதன் முதல்வ... மேலும் பார்க்க

மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையிலுள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் இ.எஸ்.நாகேந்திர பிரசாத் தேசியக் கொடியை ஏற்றினாா். இந்த விழாவி... மேலும் பார்க்க

சென்னை, காமராஜா் துறைமுகங்கள் இணைந்து 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை: துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால்

கடந்த நிதியாண்டில், சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்கள் இணைந்து சுமாா் 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளதாக துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளாா். சென்... மேலும் பார்க்க