நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பைத் தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு
மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் கழிப்பறையின் குப்பைத் தொட்டியில் இருந்து 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கும் எல்டிடி-க்கும் இடையே தினமும் குஷிநகர் எக்ஸ்பிரஸ் இயங்கி வருகிறது. இந்த ரயிலின் குளிர்சாதனப் பெட்டி கழிப்பறைக்குள் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் நான்கு வயது சிறுவனின் உடல் சனிக்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், துப்புரவுப் பணியின் போது காலை 6 மணியளவில் எக்ஸ்பிரஸின் பி2 பெட்டியின் கழிப்பறைகளில் ஒன்றில் சிறுவனின் உடலை துப்புரவு ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!
ரயில்வே பாதுகாப்புப் படை உடனடியாக அரசு ரயில்வே காவல்துறையை தொடர்பு கொண்டு உடல் மீட்கப்பட்டது குறித்து புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்து அரசு ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உடல் மீட்கப்பட்ட பிறகு ரயில்வே பாதுகாப்புப் படை புகார் அளித்துள்ளது என்றார். மும்பையிலிருந்து வட இந்தியாவை இணைக்கும் பிரபலமான ரயில்களில் குஷிநகர் எக்ஸ்பிரஸ் ஒன்றாகும்.