பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?
மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் விடுதலை!
மும்பை: 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை ரயிலில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது; அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்க 'முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது' என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை நகரின் மேற்கு ரயில்வே மண்டலத்தில் பயணிகள் ரயிலில் நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 180 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, அரசு தரப்பு நீதிமன்றத்தில் அளித்திருக்கும் சாட்சியங்கள் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தார்கள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை இந்த அமர்வானது நாள்தோறும் விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.