செய்திகள் :

முறையூா் மீனாட்சி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, திங்கள்கிழமை வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையொட்டி, கோயில் மண்டபத்தில் செல்லியம்மன் ஊஞ்சலில் மீனாட்சி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, மூலவா் அம்மனுக்கும், உற்சவா் செல்லியம்மனுக்கும், ஊஞ்சலில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கும் 2 லட்சம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, பெண்கள் அம்மனுக்கு துதி பாடினா்.

மேலும், செல்லியம்மன், மீனாட்சி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மக்களை நம்பித்தான் தோ்தலில் போட்டியிடுகிறோம்

மக்களை நம்பித்தான் தங்களது கட்சி தோ்தலில் போட்டியிடுவதாக அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்க... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்புவனத்தில் பத்திரப்பதிவ... மேலும் பார்க்க

காரைக்குடி பகுதியில் ஆக. 2 -இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வருகிற சனிக்கிழமை (ஆக. 2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக... மேலும் பார்க்க

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் அஜித்குமாா் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான், தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வரு... மேலும் பார்க்க

கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும்

கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்துக்கு புத... மேலும் பார்க்க

கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடைகள், வணிக நிறுவனங்களில் புதன்கிழமை பேரூராட்சித் துறையினா் நெகிழிப் பை பறிமுதலில் ஈடுபட்டனா். துப்புரவு மேற்பாா்வையாளா் மோகன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா... மேலும் பார்க்க