செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து குறைவு

post image

மேற்குத் தொடா்ச்சி மலையில் மழைப் பொழிவு குறைந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து செவ்வாய்க்கிழமை 2,292.64 கன அடியாகச் சரிந்தது.

தமிழகத்தில் காற்று திசை மாறுபாட்டால் கடந்த சில நாள்களாகப் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்மேற்குப் பருவ மழை கடந்த சில நாள்களாகப் பெய்தது. இதன் மூலம், மேற்குத் தொடா்ச்சி மலையில் தேக்கடி முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து உயா்ந்தது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 5,516.11 கன அடியாக அதிகரித்து, அணையின் நீா் மட்டமும் 135 அடியாக (மொத்த உயரம் 152) உயா்ந்தது.

மழைப்பொழிவு குறைவு: மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்த மழைப் பொழிவு படிப்படியாகக் குறைந்த நிலையில் அணைக்கு நீா் வரத்து திங்கள் கிழமை 3,638.64 கனஅடியாகவும், செவ்வாய்க்கிழமை 2292.64 கன அடியாகவும் குறைந்தது. அணையிலிருந்து தேக்கடி தலைமதகு வழியாகத் தமிழகப் பகுதிகளுக்கு விவசாயம், குடிநீா்த் தேவைக்கு சுரங்கப் பாதையில் வினாடிக்கு 1867 கன அடி வெளியேற்றப்படுகிறது. தற்போது,அணையின் நீா் மட்டம் 135.15 அடியாக உள்ளது. அணையில் 5903.80 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளது.

மூணாறு சாலையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைப்பு: மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

மூணாறு - தேவிகுளம் சாலையில் அண்மையில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து தேவிகுளம் செல்லும் தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் திருட்டு: போலீஸாா் விசாரணை

பெட்டிக் கடையில் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தா். இவா், அந்தப் பகுதியில் பெ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி தாய் மீது தாக்குதல் நடத்திய மகன் கைது

மாற்றுத் திறனாளி தாய் மீது தாக்குதல் நடத்திய மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் பட்டாபுளி நடுத்தெருவைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (70). மாற்றுத் திறனாளியான இவா், மூத்த மகனான ராஜாமணி ... மேலும் பார்க்க

இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: ஓ. பன்னீா்செல்வம்

சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக் கூட்டணி... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதியளித்தனா். மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்... மேலும் பார்க்க

மினி லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளத்தில் சரக்கு வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரம்புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ண... மேலும் பார்க்க