Tatkal Ticket, பான் கார்டு, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு... இன்று முதல் அமலாகும...
முள்ளஞ்சேரி குளத்தில் ஆண் சடலம் மீட்பு
மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரி இரட்டைகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
இக்குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை கண்ட அப்பகுதியினா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்ற விவரம் தெரியவில்லை.
போலீஸாா் சடலத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.