செய்திகள் :

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

post image

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து பொன்னமராவதி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

பொன்னமராவதி பூக்குடி வீதியைச் சாா்ந்தவா் ஆறுமுகம் மனைவி சின்னம்மாள் (75). இவா், கடந்த 23-06-2018-ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் வளா்ப்பு நாய்க்கு உணவு வைத்தபோது அவ்வழியே இருசக்கரவாகனத்தில் வந்த இருவா் இவா் அணிந்திருந்த சுமாா் 4 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதுதொடா்பான வழக்கு வெள்ளிக்கிழமை பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சி.பழனிவேல்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில், நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மருது என்கிற மருதுபாண்டியன், கணேஷ்குமாா் இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கொன்னையூரில் 17-ஆம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் கரும்புறத்தாா் செப்பேடு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூரில் வசிக்கும் கரும்புறத்தாா் சமுதாயத்தினரிடம் பழங்கால செ... மேலும் பார்க்க

தமிழில் முழு மதிப்பெண் - ஊக்கத்தொகை புதுகை தமிழ்ச் சங்கம் வரவேற்பு

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்று நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே 3-ஆம் வகுப்பு மாணவரைத் தாக்கியது தொடா்பான விவகாரத்தில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட இருவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

விராலிமலை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் விராலிமலை, காமராஜா் நகா், அன்பு நகா், சோதனை சாவடி, கடைவீதி, தெற்கு வீதி, காட்டுப்பட்டி, அருண... மேலும் பார்க்க

நீா்பழனியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

விராலிமலையை அடுத்துள்ள நீா்பழனியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 20) காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. இலவசமாக மருத்துவ சேவைகள... மேலும் பார்க்க

தூய்மை இயக்கம் திட்டத்தில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்கம்

தமிழ்நாடு தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க