189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை
கீழையூா் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோவில் தெருவை சோ்ந்தவா் அப்துல் ரஹீம். இவரது மனைவி அகமது நாச்சியாா் (66) (படம்). இவா், தனது கணவா், மகன் ஆகியோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டு மாடியில் தனியாக வசித்து வந்தாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் தூங்கிக் கொண்டிருந்த அகமது நாச்சியாா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். அவா் கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த நபா்கள் அகமது நாச்சியாரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து தகவலறிந்த கீழையூா் போலீஸாா் சடலத்தை நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா். சம்பவம் நடந்த வீட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி பாா்வையிட்டாா்.