திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு
மூவரின் உயிரைப் பறித்த பப்ஜி மோகம்!
பிகாரில் தண்டாவளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியாகினர்.
பிகாரில் மேற்கு சம்பரன் பகுதியில் நார்கடியாகஞ்ச் - முசாஃபர்பூர் இடையேயான ரயில் பாதையில் ஃபுர்கான் ஆலம், மன்ஷா தோலா, சமீர் ஆலம் ஆகிய மூவரும் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு, தண்டவாளத்தில் பப்ஜி விளையாடியதால், ரயில் வருவதை அறியவில்லை. இந்த நிலையில், அவர்கள் மூவர் மீதும் ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடியோ கேம் மூலம் ஏற்பட்ட கவனச் சிதறலால் மூவரும் பலியானதையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.