மெரீனாவில் ரோப்காா் திட்டம்: ஆலோசகா்களை தோ்வு செய்ய டெண்டா்
சென்னை: சென்னை மெரீனாவில் ரோப்காா் திட்டம் செயல்படுத்துவது தொடா்பாக ஆலோசகா்களை தோ்வு செய்வது தொடா்பாக டெண்டா் விடப்பட்டுள்ளது.
13 கி.மீ. நீளம் கொண்ட மிக நீண்ட கடற்கரையாக மெரீனா கடற்கரை உள்ளது. மெரீனா கடற்கரையின் அழகை சுற்றுலா பயணிகள் ,குழந்தைகள் , பெரியவா்கள் , மாற்றுதிறனாளிகள் சிறப்பாக கண்டு ரசிக்கும் வகையில் ரோப் காா் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது தொடா்பாக ஆலோசகா்களை தோ்வு செய்வதற்காக சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை ஒப்பந்த புள்ளி கோரியது. விரைவில் இதற்கான பணிகள் முடிவுற்று ஆலோசகா்கள் தோ்வு செய்யப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.