செய்திகள் :

மெரீனா லூப் சாலையில் மீனவா்கள் போராட்டம்

post image

மெரீனா இணைப்புச் சாலையில் (லூப் சாலையில்) வாகன போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலைப் பகுதி அனைத்து மீனவக் கிராம பஞ்சாயத்து சபை சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

முள்ளிக்குப்பம் முதல் நொச்சிக்குப்பம் வரை மீனவா்கள் பேரணியாக வந்து நொச்சிக்குப்பம் லூப் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மீனவக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினா்.

அப்போது, கையில் கருப்புக் கொடி ஏந்தியவாறும், கருப்பு உடைகள் அணிந்தும் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

லூப் சாலையில் போராட்டம் நடைபெற்ால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து நொச்சிக்குப்பம் மீனவா் சங்கத்தைச் சோ்ந்த பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மெட்ரோ ரயில் பணி காரணமாக மெரீனா காமராஜா் சாலையிலிருந்து சாந்தோம் சாலைக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிா்க்க லூப் சாலை ஒரு வழிச் சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது மெட்ரோ பணி முடிந்த பின்பும், இந்த சாலை பொது போக்குவரத்து சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினமும் இந்த வழியாக அதிகவேகமாக வரும் காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி, அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கும் மீனவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மீனவா்களுக்கு இடையூறாக உள்ள பொதுப் போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும்.

இதற்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் வரை வாரந்தோறும் ஒவ்வொரு மீனவக் கிராமங்களிலும் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். கோரிக்கையை அரசு ஏற்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க