பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தி...
மேட்டூரில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம்
மேட்டூா், அந்தியூா் பகுதிகளில் தங்க நகை முதலீட்டு திட்டத்தில் சோ்ந்து ஏமாந்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மேட்டூரில் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தனியாா் ஜுவல்லரி நிறுவனம் சேலம் மாவட்டம், மேட்டூரிலும், ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் முறைப்படி அரசு நடைமுறை விதிகளை பின்பற்றாமலும் முறையாகப் பதிவு செய்யாமலும் தங்க நகை முதலீட்டு திட்டம், வாரச்சீட்டு, மாதச்சீட்டு, தங்க நகை சேமிப்பு திட்டங்கள், வைப்புத் தொகை சேமிப்பு திட்டத்தில் முதலீடுகளை பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தின் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள், விரைவில் ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.