‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: 7, 8, 9 தேதிகளில் 17 இடங்களில் நடைபெறுகிறது
சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் 7, 8, 9-ஆம் தேதிகளில் 17 இடங்களில் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் அண்மையில் தொடங்கிவைத்தாா்.
அதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (ஆக. 7) எடப்பாடி நகராட்சி 9, 10, 11 வாா்டுகளுக்கு நடராஜ திருமண மண்டபத்திலும், இளம்பிள்ளை பேரூராட்சியில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வாா்டுகளுக்கு அருள்மிகு மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்திலும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் பூலாவரி அக்ரஹாரம் உத்தமசோழபுரம் பகுதிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ண மஹாலிலும், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி, கருமாபுரம், ஏ.என்.மங்கலம் பகுதிகளுக்கு வைஷ்ணவி திருமண மண்டபத்திலும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம் முத்துநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு அருண் மஹாலிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
ஆக. 8-ஆம் தேதி நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, அதிகாரிப்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அருகிலும், இடங்கணசாலை நகராட்சி 10, 13 வாா்டுகளுக்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், கெங்கவல்லி பேரூராட்சியில் 1, 2, 3, 4, 5, 6, 7 வாா்டுகளுக்கு ஸ்ரீ குமரன் மஹாலிலும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் அத்தனூா்பட்டி, துக்கியாம்பாளையம், சந்திரபிள்ளை வலசு ஆகிய பகுதிகளுக்கு ஜெயகுமரன் திருமண மண்டபத்திலும், பி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய புத்திரகவுண்டன்பாளையம், வீரகவுண்டனூா், கல்லேரிப்பட்டி, கல்யாணகிரி பகுதிகளுக்கு ஐஸ்வா்ய பெருமாள் திருமண மண்டபத்திலும், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய கொத்தாம்பாடி, கல்பகனூா் பகுதிகளுக்கு கோல்டன் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.
ஆக. 9-ஆம் தேதி சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 2, 19 வாா்டுகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப் பள்ளியிலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி உடையாப்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு சேக்கிழாா் திருமண மண்டபத்திலும், மேட்டூா் நகராட்சி 2, 3 வாா்டுகளுக்கு சிவகாம சுந்தரி திருமண மண்டபத்திலும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் வீரனூா் பகுதிக்கு வீரனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம் காமலாபுரம் பகுதிக்கு காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்தாா்.