விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.9 அடியாக புதன்கிழமை காலை உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 120.9 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,16,683 கன அடியாக அதிகரித்துள்துள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 68,700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு 93.61 டிஎம்சியாக உள்ளது.