மேம்பாலத்திலிருந்து விழுந்த மெக்கானிக் உயிரிழப்பு
மேடவாக்கம் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மெக்கானிக் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
பள்ளிக்கரணை பெரியாா் நகா் கவிமணி தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவா் மேடவாக்கம், தனியாா் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தாா். புதன்கிழமை இரவு பைக்கில் வேளச்சேரி பிரதான சாலை வழியாக பள்ளிகரணை நோக்கிச் சென்றாா். மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது கட்டுபாட்டை இழந்த பைக் பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில், மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த மணிகண்டன், பலத்த காயமடைந்தாா்.
அந்தப் பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்தவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.