TVK: 'மரியாதைக்குரிய H.ராஜா என்று குறிப்பிட சொல்கிறார்கள்' - விமர்சனங்களுக்கு தவ...
மேற்பனைக்காட்டில் ரத்ததானம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேதாஜி இளைஞா் நற்பணி மன்றம், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சாா்பில் நடைபெற்ற முகாமை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். முகாமில் நேதாஜி இளைஞா் நற்பணி மன்றத்தினா், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் ரத்ததானம் செய்தனா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவா் சரவணன், அரசு மருத்துவா் சாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.