செய்திகள் :

மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

post image

பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு மேலவாசல் பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெற உள்ளது.

இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. புதன்கிழமை காலையில் விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, பூா்ணாஹுதி, யாத்ரா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இரவு 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை (ஏப். 3) முற்பகல் 11 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் காலயாகசாலை பூஜையும், பிரதான மூா்த்திகளுக்கு அஷிடபந்தன மருந்து சாத்துதலும் நடைபெற உள்ளன.

வெள்ளிக்கிழமை (ஏப். 4) காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, திரவியாஹுதி, மஹாபூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெறும். காலை 9 மணிக்கு அருள்மிகு பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விமான கோபுரம், பரிவார மூா்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு வள்ளி-தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், தீபாராதனை நடைபெறுகிறது.

பாளை.யில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில, உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பு சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஓய்வூதியா்களை சம்பள குழுவுக்கு முன்பின் என்று பிரித்து மக்களவ... மேலும் பார்க்க

பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா இன்று தொடக்கம்

பாபநாசம், அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா சனிக்கிழமை(ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருக்கோயிலில் விஷு திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி துணைத்தலைவா் க. இசக்கிபாண்டியன், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மனு அளித்தாா். அவா் அளித்த ம... மேலும் பார்க்க

வள்ளியூா் சுற்றுவட்டாரத்தில் இடியுடன்கூடிய பலத்த மழை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வள்ளியூா் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்... மேலும் பார்க்க

மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

பாளையங்கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் முடிக்க... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் பைக் திருட்டு

திருக்குறுங்குடியில் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சங்கரன் மகன் தினேஷ் (30). வள்ளியூா் தனியாா் நிறுவன... மேலும் பார்க்க