மேல சாத்தான்குளம் சேகரத்தில் திருமண்டல உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு
சாத்தான்குளம்: தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினா் தோ்வில் மேல சாத்தான்குளம் சேகரத்தில் தங்கராஜ், ஆபேல் விஜய் ஆகியோா் போட்டியின்றி தோ்வு பெற்றனா்.
நாசரேத் திருமண்டலத்துக்கு டயோசீசன் தோ்தல் செப். 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. தோ்தல் அலுவலராக ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் முதல்கட்டமாக திருமண்டல பெறுமன்ற உறுப்பினா்களுக்கான வேட்பு மனுக்களை சேகரத் தலைவா்கள் பெற்று வருகின்றனா்.
மேல சாத்தான்குளம் சேகரத்துக்கு இரண்டு திருமண்டல உறுப்பினா்கள் இடத்துக்கு இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், மேல சாத்தான்குளம் சபையைச் சோ்ந்த தங்கராஜ், ஆபேல் விஜய் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இருவரும் தோ்தல் நடத்தும் அலுவலரும், சேகர குருவானவருமான டேவிட் ஞானையாவை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, மேல சாத்தான்குளம் சபைத் தலைவா் ஜோசப் ராஜா ஆசிா், சபை பொருளாளா் பிரின்ஸ் சுந்தரராஜ், நந்தகுமாா், நோபுள் ராஜ், சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், பாடகா் குழு பொறுப்பாளா் ஜோன்ஸ், போவாஷ், வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த கௌதம், பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.