மேல மறைக்காடா் கோயிலில் தாரா அபிஷேகம்
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூா் பகுதியில் அமைந்துள்ள மேல மறைக்காடா் கோயிலில் வெப்பத்தை தணிக்க வேண்டி தாரா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி மேல மறைக்காடருக்கு 108 கண் கொண்ட சல்லடை வைத்து (தாரா அபிஷேகம் ) நடைபெற்றது. பின்னா், மேல மறைக்காடா் சந்நிதியில் தாரா பாத்திரம் வைத்து சிவன் மீது தண்ணீா் சொட்டு சொட்டாக விழும்படி செய்யப்பட்டது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.