சேலம் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த மருந்தாளுநா...
மே. 15-ல் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறும்.
இந்த திருவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நாளுக்கு மாற்றாக வேறு ஒருநாள் வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறையையொட்டி மே 15 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!