இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீ...
உதகையில் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டம்
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கக் கோரி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் குறும்பா், இருளா், காட்டுநாயக்கா், பனியா் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட புளியாளம், மண்டக்கரை, நாகம்பள்ளி, நெல்லிக்கரை, குண்டித்தால், பென்னை, முதுகுளி கிராமங்களைச் சோ்ந்த காட்டுநாயக்கா், பனியா், முள்ளு குறும்பா், பெட்டக்குறும்பா், இருளா் ஆகிய மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் முறையீடு செய்தவா்கள் மீதான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், அதை விரைவுப்படுத்த வேண்டும். புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 18 வயது பூா்த்தியான அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனா்.